
- This event has passed.
பங்குனி உத்திர மகேஸ்வர பூஜை
March 26, 2023
அன்புடையீர்,
வணக்கம்.
இப்பவும் நம் சங்கத்தின் சார்பாக வருகின்ற 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை குரோம்பேட்டை ராதா நகர் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் பங்குனி உத்திர மகேஸ்வர பூஜை நடைபெற இருப்பதால், நமது உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, மகேஸ்வரர் அருள் பெறுமாறு வேண்டுகிறோம். பத்திரிக்கை தனியாக அனுப்பவில்லை இதையே அழைப்பாக ஏற்று தங்களுக்கு தெரிந்த நம் நகரத்தார் பெருமக்களுக்கு தகவல் தெரிவித்து கலந்துகொள்ள செய்ய வேண்டியது. தற்போதுள்ள வைரஸ் காய்ச்சல் பரவலால் அரசு விதிப்படி முகக் கவசம் அணிந்து
பாதுகாப்புடன் வரவேண்டியது.
‘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நிகழ்ச்சி நிரல்
26-03-2023 ஞற்றுக்கிழமை
காலை 7.30 மணிக்கு : நியூ காலனி 2வது மெயின் ரோட்டில் உள்ள கன்னி மூலகணபதி ஆலயத்திலிருந்து (AS Mahal)வேல் எடுத்துச் செல்லுதல்
காலை 8.15 மணி : விநாயகப் பானை வைத்தல்
காலை 10.30 மணி : வேலுக்கு அபிஷகம்
காலை 10.35 மணி : பக்திப்பாடல் பாராயணம்
மதியம் 12.30 மணி : சஷ்டி கவசம்
மதியம் 12.50 மணி : போற்றி புஷ்பாஞ்சலி
மதியம் 1.00 மணி : தீபாராதனை மற்றும் அன்னதானம்
மதியம் 2.30 மணி : மங்கள பொருட்கள் ஏலம்
மதியம் 4.15 மணி : பானக்க பூஜை
நன்றி
குரோம்பேட்டை நகரத்தார் சங்கம்
குரோம்பேட்டை