
- This event has passed.
குன்றத்தூர் காவடி திருவிழா
April 1, 2023 @ 12:30 pm - April 2, 2023 @ 5:00 pm
அன்புடையீர்
நகரத்தார் பெருமக்களுக்கு வணக்கம் இப்பவும் நமது குன்றத்தூர் காவடி திருவிழாவும் வருகிற ஏப்ரல் 1 – 04 – 23மற்றும் 2-04-2023தேதிகளில் நடத்துவதாக முடிவு செய்துள்ளது. வழக்கம்போல் 01-04–2023 சனிக்கிழமை மதியம் லெட்சுமி அம்மாள் பள்ளியில் காவடிகட்டி அன்று மாலை 7.00 மணிக்கு வேலுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெறும். அனைத்து பக்தகோடிகளுக்கும் லெட்சுமி அம்மாள் பள்ளியில் இரவு பலகாரம் வழங்கப்படும்.மறுநாள் 02-04-2023 ஞாயிறு காலை சரியாக 6-00 மணிக்கு வேலுடன் காவடிகள் புறப்பட்டு நகர்வலம் வந்து முத்துமாரிஅம்மன் தரிசனம் ஏரிக்கரை பிள்ளையார் தரிசனம் செய்து குன்றத்தூர் சென்று காவடி செலுத்துதல் நடைபெற உள்ளது. காலை உணவு தோப்பிலும் மதிய உணவு கோவில் அடிவாரத்தில் உள்ள ஆறுபடையப்பா
திருமண மண்டபத்திலும் ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து பக்தகோடிகளும் கலந்துகொண்டு காவடித்திருவிழாவினை மிகச்சிறப்பாக நடத்தி முருகன் அருள்பெற வேண்டுகிறோம்.
இப்படிக்கு
குரோம்பேட்டை குன்றத்தூர் நகரத்தார் பாதயாத்திரைக்குழு