நகரத்தார்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள் ,சங்கக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நமது நமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் நற்பணிகள் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தவும் தீர்மானித்திருக்கிறோம். எதிர்காலத்தில் நமது சந்ததியினர் பலனடைகிற வகையிலும் இச்சமுதாயக்கூடம் பயன்படுத்தப்படும்.
இக்கட்டிடம் தரைதளம் மற்றும் மூன்று தளங்களைக் கொண்டு 10000 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது . தரைத்தளத்தில் கார் பார்க்கிங், முதல் தலத்தில் கம்பூனிட்டி ஹால், இரண்டாவது தலத்தில் டைனிங் ஹால் , மூன்றாவது தலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 10 அறைகள் நமது நகரத்தார்கள் சென்னை வருகிறபோது நகர விடுதி போல் தங்கி செல்ல ஏதுவாக சிறப்பான வடிவமைப்புடன் கட்டப்பட இருக்கிறது. மேலும் மின்தூக்கி(lift) வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இத்தனை சிறப்பம்சங்களுடன் கூடிய கிரோம்பேட்டை நகரத்தார் சங்கம் டிரஸ்டின் சமுதாயக்கூடம் கட்டுவதற்காக எங்களால் ஆனா முயற்சியால் காட்டி கொண்டு இருக்கிறோம். மேற்படி கட்டித்தை நிறைவு செய்வதற்கு இன்னும் பெரும்தொகை தேவைப்படுகிறது.
நமது நகரத்தார் சமூக செல்வந்தர்கள்,தொழிலதிர்பகல்,நகரத்தார் சங்கங்கள், நமது ஒன்பது நகரக்கோவில் நிர்வாகிகள்,உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் நகரத்தார் இளைஞர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி எங்களது சமுதாயக்கூடம் பணியை நிறைவு செய்ய ஆதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறோம்.
தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு வருமானிவரிச் சட்டம் 80-G ன்படி வரிச் சலுகை உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ருபாய் 10000ம், அதற்கு மேல் நன்கொடை அளிப்பவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்படும்.
தாங்கள் நன்கொடையை கீழ்காணும் எங்கள் டிரஸ்டின் வங்கிக்கணக்கில் செலுத்தி,அதன் விபரத்தையும் எங்களுக்கு தெரிவிக்க வேண்டியது.