குரோம்பேட்டை நகரத்தார் சங்கம் 1973ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. அப்போது இருந்து நம் பெரியோர்களின் முயற்சியால் சிறுக சிறுக வளர்ந்த நம் சங்கம். 1994ஆம் ஆண்டு 33பேர் உறுப்பினர்களாக சேர்ந்து குரோம்பேட்டை நகரத்தார் சங்க டிரஸ்ட் தொடங்கப்பட்டது
இப்போதய சங்க தலைவர் திரு.சின்னத்தம்பி செட்டியார், சங்க டிரஸ்ட் தலைவர் திரு.செந்தாமரை கண்ணப்பன், முன்னாள் பொருளாளர் திரு.கண்ணப்பன்,முன்னாள் சங்க தலைவர் திரு.சேதுலட்சுமணன் செட்டியார் போன்றோர்கள் முயற்சியால் சீட் நடத்தி அதன் மூலமும், உறுப்பினர்கள் மூலமும் சிறுக சிறுக பணம் சேர்த்து , 1995ஆம் ஆண்டு குமரகுன்றம் முருகன் கோவில் அருகில் கஜலட்சுமி நகரில் 4000 சதுரடி உள்ள காலி மனை வாங்கினார்கள்